மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பால் பண்ணையாளர்களின் உதவியாளர்கள் என்ற பெயரில் கற்கை நெறி ஒன்றை ஆரம்பித்துள்ளது.
பால் பண்ணைகளை கொண்டு நடத்துவதில் இளைஞர்களை ஈடுபடுத்துவதே இதன் நோக்கமாகும் என்று அந்த திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் குமுதினி ராத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தைச் சேர்ந்தஇளைஞர் யுவதிகள் இந்த கற்கை நெறியை தொடர முடியும்.
இது தொழில் சார்ந்த கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கற்கை நெறியாகும்.
கற்கை நெறியை பூர்த்தி செய்வோருக்கு தேசிய திறனாற்றல் தரத்தில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
கற்கை நெறி தொடர்பான மேலதிக விபரங்களை 0812388216 என்ற தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Akurana Today All Tamil News in One Place