காணாமல் போன 12 வயது சிறுமொருவர், கண்டி நகரில் சுற்றித்திருந்து கொண்டிருந்த நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
கண்டி – பைரவகந்த பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே, இவ்வாறு காணாமல் போயிருந்தார். இச்சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பாக, கண்டி பொலிஸ் நிலையத்தில், சிறுமியின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று (15) காணாமல் போன இச்சிறுமியிடம் இருந்த அலைபேசி இலக்கத்தை வைத்தே, சிறுமி உள்ள இடத்கை் கண்டுபிடித்த பொலிஸார் அவரை மீட்டுள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளின் போது தான் சிலரால் கடத்தப்பட்டுவிட்டதாக கூறிய சிறுமி, பின்னர், தானாகவே வீட்டிலிருந்து வெளியே வந்ததாக, பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சிறுமி, வைத்திய பரிசோதனைக்காக, கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் சிறுமி சென்ற இடங்களில் உள்ள பாதுகாப்பு கமெராகள், அவரிடம் இருந்த அலைபேசி தரவுகளை அடிப்படையாக கொண்டு, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Akurana Today All Tamil News in One Place