சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

2020 மார்ச் 13 முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் செப்ரெம்பர் 30 ஆம் திகதிவரை 3 மாதங்களுக்கு நீடிக்கப்படும் என்று  மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், ஜூன் 30 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 3 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படும் நடவடிக்கைகள் காரணமாக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கல், சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான எழுத்து மற்றும் செயல்முறைப் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter