நாட்டில் நேற்றைய தினம் 28 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,262 ஆக உயர்வடைந்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வருகை தந்த 11 பேரும், இந்திய கடல் படையினர் ஐவரும், பஹ்ரைனிலிருந்து வருகை தந்த 4 பேரும், பங்களாதேஷிலிருந்து வருகை தந்த 4 பேரும், வியட்நாம், கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த தலா ஒருவரும் இவ்வாறு கொரோனா தெற்றுக்குள்ளாகியவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவரும் உயிரிழந்துள்ளார். இது இலங்கையில் பதிவான 13 ஆவது கொரோனா உயிரிழப்பு சம்பவம் ஆகும்.
தற்போது 244 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 56 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.
அதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 3,005 ஆக பதிவாகியுள்ளது.
Akurana Today All Tamil News in One Place