இலங்கையில் 13 ஆவது கொரோனா மரணம் பதிவு

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் இருந்து கடந்த 02 ஆம் திகதி வந்த குறித்த நபர் சிலாபம், அம்பகஹவில தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த நபர் செப்டம்பர் 9 ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய, கப்பல் ஒன்றில் மாலுமியாக  வேலை செய்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter