ஒவ்வொரு துறையில் இருந்தும் விடுக்கப்படும் அதிரடியான அறிவிப்புகளைப் பார்க்குமிடத்து, நாடு முழுமையாக முடங்குவது வெகுதொலைவில் இல்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. அந்தளவுக்குப் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுநிற்கின்றது.
அத்தியாவசிய அரச நிறுவனங்களைத் தவிர, ஏனைய அரச நிறுவனங்களில் கடமையாற்றுவோருக்கு எதிர்வரும் மூன்றுமாத காலத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறானவர்கள் வீட்டுத்தோட்டங்களை மேற்கொள்ளவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் துறைகளில் பல நிறுவனங்களைச் சேர்ந்த பலரும், கடந்த பல மாதங்களாக வீட்டில் இருந்து வேலை: எனும் முறைமையின் கீழே பணியாற்றுகின்றனர். மின்வெட்டு அமலில் இருக்கும் வேளையில், அந்த முறைமையானது எவ்வளவு கடினமானது என்பதெல்லாம் திணைக்களத்துக்குப் பொறுப்பானவர்களுக்கு மட்டுமே தெரியும்.
பெருநாள்களுக்கு இரண்டொரு நாள்களுக்கு முன்னத் சாதாரண பஸ்களில் எவ்வளவு சனநெரிசலாக இருக்குமோ, அந்தளவுக்கு அன்றாடம் சனநெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, குறிப்பிட்டதைப் போல சில வழித்தடங்களில் பஸ்கள் முற்றாக இல்லை. இன்னும் சில வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கைகள் குறைந்துள்ளன. இதற்கிடையே, வெள்ளிக்கிழமையுடன் தனியார் பஸ் சேவைகளும் முடங்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல நாள்கள் நீண்ட வரிசையில் நின்றே, எரிபொருளை பெற்றுக்கொள்ளவேண்டும். அந்த நெருக்கடி தீர்க்கப்படாத வரையில், ஒவ்வொரு துறையும் கொஞ்சம், கொஞ்சமாக முடங்கும் என்பதில் ஐயமில்லை. இது, இன்னுமின்னும் நெருக்கடி யை அதிகறித் துவிடும்.
பாம்பொன்று தீண்டிய சிறுவனை, பெற்றோர் வைத்தியசாலைக்குச் எடுத்துச் சென்றபோதிலும், விஷத்தை தடுப்பதற்கான மருந்துகள் இன்மையால் அந்தச் சிறுவன் உயிரிழந்துவிட்டான். அநுராதபுரத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து அச்சிறுவனின் பெற்றோர். “நாங்கள், ஒரு டொலரைக்கூட களவெடுக்கவில்லை” என கதறியமுந்தனர்.
அமெரிக்க டொலர் பிரச்சினையால் இறக்குமதி செய்வதில், தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இரண்டொரு நாள்களுக்கு இறக்குமதி ஸ்தம்பிதமடையுமாயின், அந்தந்த பொருட்களுக்கு உள்ளூர் சந்தையில் தட்டுப்பாடு நிலவும்; வரிசைகளும் நீண்டு கொண்டே செல்லும்; பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். ஓவ்வொரு நாளும் விலை அதிகறிப்பதை அறிந்துகொண்ட பெரும் முதலைகள் பதுக்கிவைத்துக்கொள்வர்.
தேவைக்கேற்ப இறக்குமதி செய்யமுடியாத நிலைமையில், இரண்டொரு வாரங்களுக்கு களஞ்சியப்படுத்துவதற்கு தேவையான வகையில் இறக்குமதியை எதிர்பார்க்க முடியாது. ஆக, இருப்பதைக் கவனமாக பயன்படுத்தவே வேண்டும்.
மக்கள் அனைவரும் வீதிகளுக்கு இறங்கிவிட்டால், நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். ஒவ்வொரு நாளும் ஏகோவொரு வகையில் தியாகம் செய்துகொண்டி ருப்போர் பொறுமையை இழந்துவிட்டால், அதுவே பெரும் சிக்கலாகிவிடும்.
ஆகையால், ஓவ்வொரு துறையிலும் இனங்காணப்படும் முன்னுரிமைக்கு முக்கியத்துவமளித்து நாட்டை இயங்கச்செய்யவேண்டும். அதனூடாகவே, ஓரளவுக்கேனும் நிலைமையை சமாளிக்கமுடியும். இல்லையேல் முழு முடக்கத்துக்கே வித்திடும். (Tamil-Mirror 15/6/2022)
Akurana Today All Tamil News in One Place