பஸ் கட்டணங்களை 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.
எரிபொருட்களின் விலை அதிகரிப்பையடுத்து பஸ் கட்டணங்களை மீண்டும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை முச்சக்சகர வாகனங்களின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக முச்சக்கர வாகனத் தொழிற்துறையினர் கோரியுள்ளனர்.
முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 100 ரூபாவாகவும் மேலதிக கிலோமீற்றர்களுக்கான கட்டணத்தை தலா 80 ரூபாவாகவும் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முச்சக்கர வாகனசாரதிகள் மற்றும் தொழிற்துறையினர் சங்கம் தெரிவித்துள்ளது.
Akurana Today All Tamil News in One Place