நாளை (17) இரண்டு எரிவாயு கப்பல்களுக்கு 7 மில்லியன் டொலர்களை செலுத்தவுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
3700 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் நாளை காலை நாட்டை வந்தடையவுள்ளதாக அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு கப்பல் நாளை மறுநாள் இலங்கையை வந்தடைய உள்ளது.
இரண்டு கப்பல்களுக்கும் நாளை பணம் செலுத்தப்படும் என தலைவர் தெரிவித்தார்.
புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும். (Aruna)
Akurana Today All Tamil News in One Place