பாடசாலை நேர அதிகரிப்பு நடைமுறைப்படுத்தலுக்கான சுற்றுநிருபம்
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் ஏப்ரல் 18 இன் பின்னர் பாடசாலை கற்றல் கற்பித்தல் நேரத்தை ஒரு மணித்தியாலம் அதிகரிக்க வேண்டும் என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு 139 கற்றல் நாட்கள் மாத்திரமே காணப்படுவதால் இந்த தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.
இதன் படி.
தமிழ் சிங்கள் பாடசாலைகள்
* தரம் 1 தொடக்கம் 4 வரை – 30 நிமிடங்கள்
• தரம் 4-தரம் 13 வரை – ஒரு மணித்தியாலயம்
முஸ்லிம் பாடசாலைகள்
* கடமைகளை நிறைவேற்றுவதற்காக வெள்ளிக்கிழமை பாடசாலை நேரகாலத்தோடு முடிவடைவதால் வெள்ளி தவிர்ந்த ஏனைய வார நாட்களில் பிற்பகல் 3.15 வரை பாடசாலை நடாத்தப்படல் வேண்டும்.
* அதிகரிக்கும் ஒரு மணித்தியாலயத்திற்காக 10 நிமிட இடைவேளை வழங்கப்படல் வேண்டும். இடைவேளை தொடர்பாக அதிபர் தீர்மானிப்பார்.
மேலதிக கற்றல் நேரம் உட்பட்ட நேரசூசியைத் தயாரிப்பது மற்றும் அதற்காக
ஆசிரியர்களுக்கு பாடங்களை ஒதுக்குதல் என்பன அதிபரின் தீர்மானத்தின் படி
இடம்பெறும்.
இவற்றில் ஏதேனும் பிரச்சினை நிலை தோன்றின் வலயக் கல்விப் பணிமனையின் கல்விப்பணிப்பாளர் தீர்மானங்களை மேற்கொள்வார்;
Akurana Today All Tamil News in One Place