ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், சர்வக்கட்சி மாநாடு ஜனாதிபதி காரியாலயத்தில், இன்று (23) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி என்பன இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளன.
அத்துடன், எதிரணியின் தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதலான கட்சிகளும், சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்துள்ளன.
அதேநேரம், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்துள்ளது.
இதேவேளை, சர்வகட்சி மாநாட்டில், 11 கட்சிகளின் கூட்டணியின், 3 உறுப்பினர்கள் பங்கேற்பதாக, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். (Tamil mirror)
Akurana Today All Tamil News in One Place