அன்றாட சம்பளத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்து, சமைக்கும் குடும்பங்கள் பல இருக்கின்றன. காலையில் கூலி வேலைக்குச் செல்லும் குடும்பத்தலைவன் சம்பளத்துடன் வீட்டுக்குத் திரும்்பினால்தான், இரவு உலை வைக்கப்படும். சுணங்கிவிட்டால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம், சுண்டில் அளந்து, சமையல் செய்யப்படும்.
ஆனால், அன்றைய தினத்துக்குரிய கூலி கிடைக்காவிடின், பக்கத்து வீட்டுக்கு அக்குடும்பத்தலைவி கடனாளியாகி விடுவாள். நிலைமை இரண்டொரு நாள்களுக்கு நீடிக்குமாயின், அடுத்தடுத்த வீடுகளுக்கும் குடும்பத்தலைவி கடனாளி; இவ்வாறுதான் இந்த அரசாங்கத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களும் அமைந்துள்ளன. ஒவ்வொரு நாடுகளிடமும் கையேந்த வேண்டி௰ துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷிடமும் கடன்பெற்றுள்ளது. நமது நாட்டுப் பிரஜைகள் வறுமைக்கோட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்; எதற்கும் வரிசையில் நிற்கின்றனர். இறுதியாக எரிபொருளுக்காக காத்திருக்கின்றனர்.
கையிலிருப்பில் இருக்கும் எரிபொருட்கள் தீர்ந்துவிட்டால், முழுநாடும் முடக்கப்பட்ட வேளையில், வீதிகள் வெறிச்சோடி இருந்ததைப் போன்றதொரு நிலைமை ஏற்படும். எனினும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படுமென்ற அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலைய பணியாளர்கள் அத்தியாவசியத்தை’ எவ்வாறு தீர்மானிப்பர்.
அத்தியாவசியத்தை தீர்மானிக்க முடியாமையால், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் சிலவற்றில் பதற்றமான நிலைமைகளும் ஏற்பட்டு தணிந்திருக்கின்றன. இவையெல்லாம் நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட மோசமாக தீர்மானங்களால் ஏற்பட்ட விளைவுகளாகும். தனியார் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணிக்கை பெரும்பாலான வீதிகளில் குறைந் துள்ளன. இதனால், அன்றாடம் கடமைக்குச் செல்வோரும் திண்டாடுகின்றனர்.
மீற்றர் பொருத்தப்பட்டிருந்தாலும் ஓட்டோக்களில் ஏறுவதற்கு பலரும் ஒருதரம் யோசிக்கின்றனர். “மீற்றர் என்ன? இவ்வளவு வேகமாக ஓடுகின்றது” எனக் கேட்டால், “நிறுவனத்திடம் கேளுங்கள்” என, ஒட்டோ சாரதிகள் கையை விரித்துவிடுகின்றனர்.
இவற்றுக்கெல்லாம் பிரதான காரணம், கஜானா காலியாகிக் கொண்டிருக்கின்றது. இதனால், கடன்பெறுவதிலும் இருப்பை செலவழிப்பதிலும் மத்திய வங்கி பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளது. மறுபுறத்தில் பங்குச்சந்தையிலும் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையில், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும், காரியாலயங்களில் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் சுற்றறிக்கைகள் விடப்பட்டுள்ளன. இவையெல்லாம் காலம் கடந்த ஞானமாகும் என்பதை மீண்டும், மீண்டும் நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றோம்.
பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சிக்கிக்கொண்டுள்ளது. வறுமைக்கோட்டில் நிற்கின்றது. ஒவ்வொன்றுக்காகவும் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். அதேபோல, அரசாங்கமும் வெளிநாடுகளில் கையை ஏந்திக்கொண்டேதான் நிற்கின்றது. கஜானா காலியாகாமல் தற்பாதுகாப்பு செய்துகொள்ளவேண்டியது அரசாங்கத்தினதும் அதன்கீழிருக்கும் நிறுவனங்களினதும் பொறுப்பாகும் என்பதுடன், காத்திருக்கும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய தார்மீக பொறுப்பு, அரசாங்கத்தின் கைகளிலேயே உள்ளதென்பதை மீண்டும் நினளைஷவூட்டுகின்றோம்.
தமிழ்மிரர்-24/2/22
Akurana Today All Tamil News in One Place