ரஷ்ய, உக்ரைன் பிரச்சினை உலக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எரிபார்க்கப்பப்படுகின்றது. இன்றைய அளவில் ஒரு பெற்றோல் பீப்பாயின் விலை 100 டொலராக அதிகரித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் சில நாட்களில் ஒரு பீப்பாய் பெற்றோலின் விலை 150 டொலராக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபப்படுகின்றது.
ஒவ்வொரு நாடுகளினதும் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சியும் 0.9 சதவீதம் குறையும் அபாயம் இருக்கிறது. அது போல் இயற்கை வாயுக்களின் விலையு்ம உயரும். சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பெற்றோல் டீசல் விலை உயர்வு
கடந்த காலங்களில் மசகு எண்ணெயின் விலை உயர்வால் இந்தியா முழுவதும் கடந்த 2021 ஆம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பெற்றோல், டீசல் விலை அதிகரித்தது. இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களில் 25 சதவீதம் எண்ணெய் பொருட்கள் உள்ளன. 80 சதவீதத்திற்கு மேல் எண்ணெய் தேவைகளுக்காக இந்தியா பிற நாடுகளை நம்பியுள்ளது.
இதன் எதிரொலியாக, மசகு எண்ணெய் விலையும் 100 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.
கோதுமை விலை உயர்வு
கருங்கடல் பகுதியிலிருந்து தானியங்கள் வரத்திலும் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உணவு பொருட்களிலும் விலையேற்றம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் உலகின் கோதுமையை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முன்னணியில் உள்ளது ரஷ்யா. அதே நேரம் உக்ரைன் கோதுமை உற்பத்தியில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதனால் உக்ரைன் மீதான போரால் இந்த பொருட்களுக்கான விலை அதிகரிப்பதற்கான வாயப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். அது போல் தங்கம் விலையும் உயர்ந்துள்ளது.
-தமிழன்.lk– (2022-02-24)
Akurana Today All Tamil News in One Place