பரசிட்டமோலுக்கான கேள்வி அதிகரிப்பு – இறக்குமதி செய்ய பின்வாங்கும் நிறுவனங்கள்

கொரோனா வைரசின் ஒமிக்ரோன் திரிபு, வைரஸ் காய்ச்சல், டெங்குப் பரவல் ஆகியவற்றின் அதிகரிப்பு காரணமாக பரசிட்டமோலுக்கான கேள்வி அதிகரித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

கடந்த 3 வாரங்களில் நாட்டின் பரசிற்றமோலுக்கான கேள்வி 275 சதவீதத்தால் உயர்ந்திருப்பதாக தெரிவித்த அவர் ,பரசிட்டமோல் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் இறக்குமதி செய்யும் நிறுவனம் அவற்றை இறக்குமதி செய்ய பின்வாங்குவதாகவும் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கூறினார்.

-தமிழன்.lk– (2022-02-24 13:22)

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter