நேற்று முதல் ஆரம்பித்து வைப்பு
பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் நேற்று முதல் ஒன்லைனில் ரயில் பயணச்சீட்டுகளை வழங்க இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பயணிகள் இணையத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடியும் அல்லது கையடக்க தொலைபேசி செயலி ஊடாக ஆசனத்தை முன்பதிவு செய்ய முடியும் என இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
இதற்கான கையடக்கத் தொலைபேசி செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும். பயணிகளின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் இந்த வசதி கிடைக்கும். பயணிகள் கடன் அட்டைகளை பயன்படுத்தியும் பணம் செலுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
– தினகரன் – (2022-02-19)
Akurana Today All Tamil News in One Place