இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் மஞ்சள் கிலோ கிராம் ஒன்றின் விலை அதிகரித்துள்ளது.
முதல் முறையாக மஞ்சள் தூள் ஒரு கிலோ கிராமின் விலை 3000 ரூபாயை கடந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவ ஆரம்பித்து முதலே மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிறுமி நாசினியாக பலர் மஞ்சள் தூளை பயன்படுத்தி வருகின்றமையினால் இவ்வாறு மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இரண்டு மாதங்களாக மஞ்சளுக்காக பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Akurana Today All Tamil News in One Place
