இலங்கையில் கடந்த நாட்களை விட நேற்றையதினம் முதல் முறையாக ஒரேநாளில் 100 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவ்வாறு நேற்றையதினம் மாத்திரம் இலங்கையில் 137 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,319 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 137 பேரில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 பேர் கடற்படை வீரர்கள் எனவும், 127 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தல் முகாமிலிருந்தவர்களெனவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,319ஆக அதிகரித்துள்ளதாகவும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 712 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 597 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 76 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place