மாடறுத்தல் தொழிலில் பாரம்பரியமாக அதிகமாக ஈடுபட்டிருப்பது முஸ்லிம் வர்தகர்கள்.
இதுவே இன்று இந்த தொழிலை தடை செய்யப்போவதாக சொல்லப்படுவதன் பின்னணி. சகோதர சிறுபான்மை இன வர்தகர்களுக்கு எதிரான இனவாத காட்டம்.
ஆனால், இந்த கால்நடை வளர்ப்பில் எல்லா இனத்தோரும் தொடர்புற்று, சிங்கள, தமிழ் என்று எல்லா இனத்து பெருந்தொகை இலங்கையரின் வாழ்வாதாரமும் இதில் இருக்கின்றது.
ஆக, இதை காட்டி நாட்டின் உண்மையான பிரச்சினைகளை திரை போட்டு மறைக்க எத்தனம். அவ்வளவுதான்.
இதைத்தவிர, இதற்கு பின்னால் பெளத்த மத தேசிய காரணங்கள் என்ற எந்த வெங்காயமும் கிடையாது.
ஏனென்றால் யார் அறுத்தாலும், சாப்பிடுவது எல்லோருமே..! இது ஏறக்குறைய இலங்கையின் தேசிய உணவாக மாறி ரொம்ப நாளாச்சு!
Akurana Today All Tamil News in One Place