6 அமைச்சுக்களில் மாற்றம் செய்ய முடிவு

அமைச்சரவை மாற்றத்தை இம்மாதம் 8, 12 அல்லது 18 ஆகிய மூன்று திகதிகளுள் ஒரு திகதியில் மேற்கொள்ள ஆளுங்கட்சியின் மேலிடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த ஆறு அமைச்சுப் பதவிகள் இதன்போது மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர்களின் இலாகாக்களில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோசமான செயல்திறன்கொண்ட எட்டு உயர்மட்ட அரச நிறுவனங்களின் தலைமைப் பதவிகளிலும் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், புத்தாண்டில் புதிய பயணத்தை மேற்கொள்வதற்கான முதற்படியாக இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய வருடத்தில் புதிய மாற்றங்களுடன் புதிய பயணத்தை மேற்கொள்ளுமாறு கடந்த வாரம் ஆளுங்கட்சி எம்.பிக்கள் பலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் விளைவாகவே இந்த அமைச்சரவை மாற்றமும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

அரச ஊடகங்களில் இப்போது உயர்பதவிகளை வகிப்போர் அந்த பொறுப்புகளில் இருந்து மாற்றப்பட அல்லது நீக்கப்படவுள்ளனர். ஏற்கனவே சுயாதீன தொலைக்காட்சி மற்றும் செலசினே நிறுவனங்களின் தலைவர்கள் பதவிகளில் இருந்து நீங்கியுள்ளதாக அறியமுடிந்தது.

-தமிழன்.lk– (2022-01-02)

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter