உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா? எனக் கேட்பதை அப்படியே தலைகீழாக, அதுவும் அவ்வீட்டிலேயே பகல் போசனத்தையும் முடித்துக்கொண்டு எஜ்மானியையே வெட்டிச் சாய்த்து, அவயவகங்களை, அறுத்துச் சென்ற சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
நாட்டில் கொலை, கொள்ளை மற்றும் படுகொலைகளுக்கு குறைவே இல்லை. ஒவ்வொன்றும், ஒவ்வொரு காரணங்களுக்காகச் சம்பவிக்கின்றது. சில வாய்த்தர்க்கங்கள் முற்றிப்போய் படுகொலையில் முடிந்துவிட்ட சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை. ஆனால், மட்டக்களப்பில் தனது எஜமானியையே கண்டம் துண்டமாக வெட்டிச் சாய்த்த சம்பவம், மிகக் கச்சிதமாய் திட்டமிடப்பட்டுள்ளது என்பது விசாரணைகளில் இருந்து புலனாகிறது.
மட்டக்களப்பு நகரின் அரசடி. பகுதியிலுள்ள பார்வீதியில் அதிக சனநடாட்டம் உள்ள பகுதியில் மாடிக்கட்டடம் கொண்ட வீட்டிலேயே இச்சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடியில் தங்க ஆபரண விற்பனை கடை நடத்திவரும் செவ்வராசா – தயாவதி தம்பதிகளின் குடும்பம், இரண்டு பிள்ளைகளுடன் மிக எளிமையாக வாழ்ந்துவந்த து. அதில், பெண் பிள்ளைக்கு 22 வயது ஆண்பிள்ளைக்கு 26 வயதாகிறது. வர்த்தகரான செல்வராசா, தனது மனைவிக்கு ஒத்துழைப்பாக காலையில் வந்து மாலையில் வீட்டுக்குச் செல்லும் வகையில் வேலைக்காரியை அமர்த்தியிருந்தார்.
27 வயதான ரவிகார்த்திகா என்ற பெண், மட்டக்களப்பு கருவப்பங்கேணி, ஓம்பிறோஸ் வீதியில் வசித்துவந்துள்ளார். பின்னர், மலேசியாவுக்கு வேலைவாய்ப்பு பெற்று, அந்த வேலைக்காரி சென்றுவிட்டார். அங்கு போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி இருந்தமையால், அந்நாட்டு பொலிஸார் அவரைப் பிடித்து நாடு கடத்திவிட்டனர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நாடுதிரும்பிய அப்பெண், வாழைச்சேனையில் திருமணம் முடித்து, பெற்றோருடன் அங்கு சென்று எட்டு மாதங்களாக வாழ்ந்து வருகின்றார். இவர், முன்னர் வேலை செய்த தனது எஜமானியின் வீட்டுக்கு அவ்வப் போது சென்று வந்துள்ளார். இந்நிலையில், சம்பவதினமான திங்கட்கிழமை (20), கல்லாறுக்கு தனது தந்தையுடன் செல்வதாகக் கணவரிடம் தெரிவித்துள்ள அப்பெண், எஜமானியம்மா தனக்கு 85 ஆயிரம் ரூபாய் தரவேண்டும். அதை வாங்கிக்கொண்டு வருமென தந்தையான ஏரம்பு ரவியிடம் (வயது – 44) கூறி, தந்தையும் அழைத்துக்கொண்டு பஸ் வண்டியில் ஏறி, மட்டக்களப்பு சினன் ஆஸ்பத்திரி சந்தியில் இறங்கியுள்ளனர்.
மட்டு. தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள கடையொன்றுக்குச் சென்று, கோழிவெட்டும் கத்தியொன்றை வாங்கி, தனது தோள்பையில் வைத்துக்கொண்டுள்ளார். அதன்பின்னர், பார் வீதியிலுள்ள எஜ்மானியம்மாவின் வீட்டுக்கு இருவரும் சென்றனர். அங்கு முதலாளியின் கார் நிற்பதைக் கண்டு, வீட்டுக்குள் செல்லாமல் அப்பெண்ணின் தந்தை தொழில் புரிந்துவரும் கருவப்பங்கேணியிலுள்ள ஹோட்டலின் முதலாளியைச் சந்திப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். அதன்பின்னர், அங்கிருந்து மீண்டும் எஜமானியம்மா வீட்டுக்கு வந்துள்ளனர்.
அருகிலுள்ள கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. அதனால், கடைக்குத் தனது மகனை அனுப்பிவிட்ட வர்த்தகர் செல்வராசா, மனைவி மகளுடன் கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, சுமார் 11.30 மணியளவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
கோவிலுக்குச் சென்றமையால், முழு தங்க ஆபகரணங்களையும் அணிந்து கொண்டிருந்த தயாவதி, அவற்றையெல்லாம் கழற்றி வைக்காது, சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, வேலைக்காரி தனது தந்தையுடன் எஜமானியின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
வழமைபோல உபசரித்த எஜமானியம்மா, பகல்சாப்பாட்டை முடித்துக்கொண்டு, செல்லுமாறு இருவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு இருவரும் தலையை ஆட்டி ஆமோதித்துள்ளனர்.
உண்டு களைத்திருந்த வர்த்தகர் செல்வராசா, ஓய்வெடுப்பதற்காக, வீட்டின் முதலாம் மாடிக்குச் சென்றுவிட்டார். மகளும் வீட்டு மண்டபத்தின் ஒருபகுதியில் சேபாவில் அமர்ந்து அலைபேசியில் மூழ்கிவிட்டார். அப்படியே துங்கியும்விட்டார்.
எஜமானியம்மா, சாப்பாடு பறிமாற இருவரும் கதைத்து, கதைத்து நன்றாச சாப்பிட்டுவிட்டனர், நேரம் 4 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. வேலைக்காரியும், எஜமானியம்மாவும் கதைத்து கொண்டிருந்தனர். வேலைக்காரியின் தந்த, வீட்டுக்கு வெளியே சென்றுவிட்டார்.
ஏதோவொரு ஞாபத்தில், வீட்டின் முன்பகுதியிலுள்ள களஞ்சிய அறைக்கு எஜமானியம்மா சென்றுள்ளார். அவரை வேலைக்காரியும் பின்தொடர்ந்துள்ளார். தருணம் பார்த்திருந்த வேலைக்காரி கத்தியை கையிலெடுத்தபோது, அதனைக்கண்ட எஜமானியம்மா வேலைக்காரியை தள்ளிவிட்டுள்ளார்.
கத்தி, வேலைக்காரியின் கையில்பட, காயம் ஏற்பட்டுவிட்டது. தன்னை சுதாகரித்துக்கொண்ட வேலைக்காரி, மீணடும் எஜமானியம்மாவை கீழே தள்ளிவிட அவர், குப்புற விழுந்துவிட்டார். அங்கிருந்த தேங்காயால், எஜமானியம்மாவின் தலையிலேயே வேலைக்காரி அடித்துள்ளார். சத்தம் போடாதவாறு, எஜமானியின் கழுத்தை சுமார் 10 நிமிடங்கள் அழுத்திப்பிடித்துக்கொண்டு 70 தடவைகள் சரமாரியாக வெட்டியுள்ளார்.
ஓடமுடியாதவாறு முழங்கால்களை இரண்டையும் வெட்டியுள்ளார். இதில், எஜமானியம்மா இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
அதன்பின்னர், ஒவ்வொரு நகைகளாக அபரித்துள்ளார். கழுத்தில் கிடந்த 25 பவுண் தாலிக்கொடியை கழற்றியபோது,
அது தலைமுடியுடன் சிக்கிக்கொண்டது. அதன்பின்னர் தலைமுடியை வெட்டி எடுத்துக்கொண்டார். கையிலிருந்த காப்புகளை கழற்ற முடியாமையால், அங்கிருந்த பலகைக்கட்டையில் வைத்து, மணிக்கட்டு பகுதியை துண்டாக்கிவிட்டு காப்புகளை கழற்றிக்கொண்டுள்ளார்.
துண்டாகிக்கிடந்த மணிக்கட்டை எடுத்து, அதன் விரல்களில் இருந்த மோதிரங்களை கழற்றிவிட்டு, காதில் கிடந்த தோட்டை, காதோடு அறுத்து எடுத்துகொண்டார். அத்தனை தங்க ஆபகரணங்களையும் எடுத்துக்கொண்டு, அறையிலிருந்து வெளியேற முற்பட்டபோது, வீட்டுக்கு வெளியே சென்றிருந்த தந்ைத வந்துவிட்டார்.
மகள் செய்த கொடூரத்தை கண்டு, அவ்விடத்தில் வைத்தே மகளைத் தாக்கியுள்ளார். இருவரும் சண்டை பிடித்து கொண்டுள்ளனர். அந்தச் சத்ததால் எழும்பிய எஜமானியின் மகள், திடீரென கண்விழித்து சென்று பார்த்தபோது, ௮ம்மா இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு, அபாயக் குரல் எழுப்பியுள்ளார்; கதறியுள்ளார். மகளின் கதறல் சத்தம் கேட்டு, கண்விழித்துக்கொண்ட கணவரும், கீழே ஓடிவந்து பார்த்தபோது, மனைவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டுள்ளார்.
பதற்றத்துடன் வெளியேறிய வேலைக்காரியும் அவருடைய தந்தையும், அங்கிருந்து தப்பியோடுவதை கண்ட ஒட்டோ சாரதி, அவ்விருவரையும் பின்தொடர்ந்தார். கடைகளில் இருந்தவர்களும் சேர்ந்து, மடக்கிப்பிடித்து பொலிஸாறிடம் ஒப்படைத்தனர்.
இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பிலான விசாரணை, பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி முஹமட் ஜெஸலி தலைமையிலான பொலிஸ் குழு மேற்கொண்டது. இதன்போதே, மேற்கண்டவாறு, வேலைக்காரி தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (80) இரவு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட தடயப் பொருட்களை சேகறித்து கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட 46 பவுண் தங்க ஆபரணங்கள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமெராவில் பதிவான ஒளித் தொகுப்புகள் அடங்கிய விசிடி எனப்படும் வண்தட்டு போன்ற தடயப் பொருட்களை பொலிஸார் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட வேலைக்காரி மற்றும் அவளது தந்த ஆகிய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. எம்.றிஸ்வான் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (21) ஆஜர்படுத்தினர். அவ்விருவரையும் ஜனவரி 4 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
“எஜமானியின் அணிந்துவரும் தங்க நகையில் நீண்ட காலமாக அந்த நகையை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையில் எஜமானியாளை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன்” என விசாரணையின் போது அந்த வேலைக்காரி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கனகராசா சரவணன் (தமிழ் மிரோர் 25/12/21)
Akurana Today All Tamil News in One Place