இணையத்தளம் ஊடாக பணமோசடியில் ஈடுபட்டு வந்த 7 பேர் கொழும்பில் சிக்கினர்

கொழும்பு – கொம்பனி வீதி பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த 7 பேரை வலான மோசடி தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் கண்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களை சேர்ந்த 35 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தள செயலிகள் ஊடாக பொதுமக்களின் பணத்தை மோசடி செய்யும் நடவடிக்கைகளில் குறித்த குழுவினர் நாளாந்தம் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் இதுபோன்ற மோசடியாளர்களிடம் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹிரு செய்திகள் –hirunews.lk– (2021-12-21 15:13:24)

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter