எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 5 ரூபாவாக அதிகரிக்க வேண்டியிருக்கும். 25 எவ்வாறாயினும், பஸ் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கு சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று பிற்பகல் கூடுவார்கள் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டபோது நாடு எதிர்கொண்ட நிலைமையை கருத்தில் கொண்டு பஸ் கட்டணத்தை அதிகரிக்கவில்லை.
வாகன உதிரி பாகங்கள் மற்றும் பல சேவைகள் 300 சதவீதம் அதிகரித்துள்ளதால், தனியார் பஸ் உரிமையாளர்களால் இயக்க முடியாத நிலை உள்ளது.
பஸ் கட்டணத்தை அதிகரிப்பது பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என்பதால், அதற்கான தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.
-வீரகேசரி- (2021-12-21)
Akurana Today All Tamil News in One Place