இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளதென சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
8ஆவதாக உயிரிழந்தவர் பெண்ணொருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலிருந்து ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குருநாகல் – பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்தவர் 72 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண் கடற்படை சிப்பாய் ஒருவரின் நெருங்கிய உறவினர் என தெரிவிக்கப்படுவதுடன், குறித்த பெண்ணுக்கு கடற்படை சிப்பாயின் ஊடாகவே இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.
இந்த பெண் சிறுநீரக தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது பெண்ணாக இவராவார்.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இதற்கு முன்னர் உயிரிழந்த அனைவரும் ஆண்கள் என சுகாதார தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
Akurana Today All Tamil News in One Place