இலங்கையில் அனைத்து வாகனங்களின் விலைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், அனைத்து வாகனங்களின் விலைகளும் 10 முதல் 15 சதவீதமாக அதிகரித்துள்ளன.
ஜப்பான் யென் மற்றும் அமெரிக்க டொலருக்கும் நிகரான ரூபாவின் பெறுமதி சரிவடைந்துள்ளமையே வாகனங்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பிற்கு காரணம்.
இதன் காரணமாக இதுவரை சொகுசு வரிக்கு உட்படாத ஆயிரம் குதிரை வலுவுக்கு குறைவான இயந்திரத்தை கொண்ட வாகனங்களும் அந்த வரிக்கு உட்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Akurana Today All Tamil News in One Place
