2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் வாகன இறக்குமதிக்காக நிவாரணம் வழங்காத காரணத்தினால் எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலை அதிகரிக்க கூடும்.
வாகனங்களின் விலை குறைவடையும் என ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
வெளிநாட்டு நாணய கையிருப்பு உயர்வடையும் வரை வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது. குறைவான விலைக்கு வாகனங்களை பெற முடியும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு இல்லாமலாக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைக்கு அமைய வாகனங்களின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்க கூடும் அதனால் இறக்குமதியாளர்களும், நுகர்வோரும் பெரும் பாதிப்பை எதிர்க் கொள்ள நேரிடும்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான நிவாணம் வழங்கப்படவில்லை மறுபுறம் நுகர்வோர் வாகனத்தை கொள்வனவு செய்வதற்கான நிவாரணமும் உள்ளடக்கப்படவில்லை.
அதன் காரணமாக வாகன இறக்குமதியில் பெரும் நெருக்கடி நிலை ஏற்படுவதுடன், மாறுப்பட்ட பல பிரச்சினைகளும் தோற்றம் பெறும் ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
-வீரகேசரி- (இராஜதுரை ஹஷான்)
Akurana Today All Tamil News in One Place