மறுஅறிவித்தல் வரை மாற்றுப்பாதை
கொழும்பு – கண்டி வீதியில் 98 ஆவது கிலோ மீற்றர் ‘கீழ் கடுகண்ணாவ வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் களப்பரிசோதனை செய்து வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி வீதியின் 98 ஆவது கிலோமீற்றர் பகுதியில் ‘கீழ் கடுகன்னாவ’ பகுதி மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனூடான போக்குரவரத்துக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்த முடியும். அதற்குத் தேவையான வழிகாட்டல்களை இலங்கை பொலிஸாரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் வழங்கி வருகின்றன.
– தினகரன் –
Akurana Today All Tamil News in One Place