காதி நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண்கள் பாரிய அநீதிக்கு உள்ளாக்கப்படுவதாக மாளிகா கந்த பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்ணொருவர் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
காதி நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் அநீதியானது எனவும் அங்கு பெண்களை கெட்டவார்த்தைகளால் கூட திட்டுவதாகவும் அந்த பெண், ஜனாதிபதியிடம் கையளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பெண் ஜனாதிபதியிடம் கையளித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நான் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன் விவாகரத்து செய்த பெண். விசேட தேவையுடைய பிள்ளை ஒருவரின் தாய்.
என்னிடம் இருந்து பிரிந்த கணவன், எனது பிள்ளைகளின் வாழ்க்கை செலவுகளுக்காக பணத்தை கொடுப்பதில்லை.
காதி நீதிமன்றம் வழங்கிய தவறான தீர்ப்பே இதற்கு காரணம். எனது நிலைமை குறித்து காதி நீதிமன்றத்தில் முறையிட்டபோதிலும் எந்த நீதியும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
இது குறித்து அனுதாபத்துடன் கவனம் செலுத்தி எனக்கு நியாயத்தை பெற்று தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
Akurana Today All Tamil News in One Place