அனைத்து கருத்துகளையும் செவிமடுக்க செயலணி தயாராகவுள்ளது- ஞானசார தேரர் தெரிவிப்பு

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் இலக்குகளை அடைவதற்கு, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க உறுதிகொண்டுள்ளதாக செயணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஓர் அடிப்படை கொள்கைக் கட்டமைப்பிற்குள் இருந்து அந்த பாத்திரத்தை நிறைவேற்றுவதோடு, எந்தவொரு குடிமகனும் இனம், மதம், ஜாதி அல்லது வேறு ஏதேனும் காரணிகளின் அடிப்படையில் சட்ட வேறுபாடுகளுக்கு உள்ளாகக் கூடாதென அவர் குறிப்பிட்டார்.

ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி ​செயலணியின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு முதன்முறையாக தௌிவுபடுத்தும் காணொளியூடான ஊடக சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.

ஜனாதிபதி ஊடக அமையத்தில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

நாட்டை முதன்மைப்படுத்தி செயற்படுவதாயின், அனைத்து கருத்துகளையும் செவிமடுக்க செயலணி தயாராகவுள்ளதாக கலகொடஅத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த பிரச்சினைகள் தொடர்பான பரந்துபட்ட தௌிவும் ஆழ்ந்த ஆய்வும் தமது செயலணிக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழன்.lk

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter