மக்கள் வங்கியை கறுப்புப்பட்டியலில் உள்ளடக்கிய சீனா தூதரகம்

நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக இலங்கையின் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அலுவலகத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன தூதரகத்தின் இந்த தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் வங்கி விடுத்துள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

ஹிரு செய்திகள் hirunews.lk

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter