இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோகிராம் 98 ரூபாய்க்கு இன்று (29) முதல் சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
சுங்கத்தின் சோதனை நடவடிக்கைகளின் பின்னர் இதுவரையில் நாட்டரிசி அடங்கிய 09 கொள்கலன்கள் தமது நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் குறிப்பிட்டுள்ளார். -தமிழ் மிற்றோர்–
Akurana Today All Tamil News in One Place