கொரோனாவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை, 23 ஆம் திகதி வபாத்தான பாத்திமா றிசானா (வயது 47) உடலை அடக்கம் செய்ய, அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சிகளை மேற் கொண்டுள்ளனர்.
அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அலி சப்ரி மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் முறையிட்டுள்ளனர்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதுபற்றி ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
இருந்தபோதும் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உடல், எரிக்கப்பட வேண்டுமென வைத்தியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக, அவரது குடும்பத்துடன் கவலையுடன் தெரிவித்தனர்.
Akurana Today All Tamil News in One Place
