உலகில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் பகுதி அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் செப்டெம்பர் 2 ஆம் திகதி முதல் சில வகுப்புகளுக்கான கால நேரம் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஆண்டு 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இதுவரை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place
