சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் நீடிப்பு

காலாவதியாகும்  சகல சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீட்டிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து 2022 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகவுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. -தமிழ் மிற்றோர்

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter