நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்டதையடுத்து, எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பின் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியிருந்தார்.
இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்தார்.
ஹிரு செய்திகள் hirunews.lk–
Akurana Today All Tamil News in One Place