மோட்டார் வாகன உரிமங்களை ( வருடாந்தம்) பெற வேண்டுமானால் அதற்கு முன் வாகன புகை பரிசோதனை சேர்டிபிகேட்டை கையளிக்க வேண்டும் என்ற தற்போது நடைமுறையில் உள்ள முறையைத் திருத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
மோட்டார் வாகன உரிமங்களை வழங்க வாகனபுகை பரிசோதனை சான்றிதழை வழங்குவது அவசியமா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
கார்பன் மூலம் சூழல் மாசடைவை ஏற்படுத்தும் வாகனங்களை அனுமதிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக வாகன ஒழுங்குமுறை, பஸ் போக்குவரத்து சேவைகள், மற்றும் வாகனத் தொழில்துறை அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
நாட்டின் மூன்று முக்கிய நிறுவனங்களால் இயக்கப்படும் புகை பரிசோதனை மையங்கள் உட்பட,புகை பரிசோதனை நிலையங்களில் இடம்பெறும் மோசடிகள், மற்றும் குறைபாடுகள் காணப்படுவதால் அது தொடர்பில் புகை பரிசோதனை முறையை விரைவில் திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வாகனங்களுக்கு புகை சான்றிதழ் பெற, திருத்தங்களை தவிர்ப்பதற்காக ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்குவது குறித்தும், மையங்களில் பணிபுரியும் பயிற்சி பெறாத சோதனை ஊழியர்கள் குறித்தும் பல புகார்கள் வந்துள்ளதாகஅமைச்சர் மேலும் தெரிவித்தார்.
புகை பரிசோதனைக் கட்டணங்களில் 10% மோட்டார் போக்குவரத்துத் துறை சம்பாதித்துள்ளது, இது இப்போது ரூ .80 மில்லியனாக வந்துள்ளது, மேலும் தற்போதுள்ள குறைபாடான முறை காரணமாக பொதுமக்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகளை இன்னும் தீர்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
Akurana Today All Tamil News in One Place