போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
அதற்கமைய மாகாண ஆளுனர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் இணைந்து மாணவர்களுக்கான பாதுகாப்பான சூழல் மேற்குறிப்பிட்ட பாடசாலைகளில் உள்ளனவா என்பது குறித்த கண்காணிப்புக்களை ஆரம்பித்துள்ளதாகவும் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.
-வீரகேசரி-(எம்.மனோசித்ரா)

Akurana Today All Tamil News in One Place