கல்வியமைச்சர் தினேஷ் அறிவிப்பார்
பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக கட்டம் கட்டமாக திறப்பது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்றைய தினம் வெளியிடவுள்ளதாக கல்வியமைச்சு நேற்று தெரிவித்தது.
பாடசாலைகளை திறப்பதற்கான சுகாதார பின்பற்றல் தொடர்பான பரிந்துரைகளை சுகாதார அமைச்சு கல்வியமைச்சுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கியிருந்தது. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அமைச்சு நேற்று தெரிவித்தது.
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கமைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இன்றைய தினம் கல்வி அமைச்சரினால் தீர்மானம் வெளியிடப்படுமென்றும் அமைச்சு தெரிவித்தது.
எவ்வாறெனினும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும்போது சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதுடன் அவற்றில் மிகுந்த கவனம் செலுத்துவது மிக முக்கியமாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம் – தினகரன் –
Akurana Today All Tamil News in One Place