Dr. ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டாலும் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் உயிராபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை நேற்றுவரை ஐந்து இலட்சத்தை அண்மித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க நேற்றுக் காலை வரை கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 4,98,694 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர்களில் 58 ஆயிரத்து 287 பேர் தொடர்ந்தும் பல்வேறு வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மேலும் 1186 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் பூரணமாக குணமடைந்து ஆஸ்பத்திரிகளிலிருந்து வீடு திரும்பியுள்ள நிலையில் நேற்றுவரை 4 இலட்சத்து 29 ஆயிரத்து 776 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 11 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்– தினகரன் –
Akurana Today All Tamil News in One Place