மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (15) முற்பகல் பெருமளவான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தங்கல்ல பொலிஸ் பிரிவில் கடமையான்றும் பொலிஸ் அணியொன்றை இந்த பகுதிக்கு அழைத்து வந்துள்ளதாகவும் தற்போது அவர்கள் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தீவிரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், எனவே இப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தத் தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் அந்த உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
-தமிழன்.lk–
Akurana Today All Tamil News in One Place