தடுப்பூசி ஏற்றுவதை கட்டாயமாக்க முடியாது – அதுரலியே ரத்தின தேரர் எம்.பி.
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்க முடியாது. அவ்வாறு தடுப்பூசி களை பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அதேவேளை…
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் உள் நாட்டு மருத்துவத்தையும் மேற்கத்தைய மருத்துவத்தையும் இணைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தின தேரர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலையியல் கட்டளை 27,/2இன் &ழ் சுகாதார அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அதுரலியே ரத்தின தேரர் மேலும் பேசுகையில்
கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக ர்மானம் எடுப்பதற்காக ஏதேனும் விசேட நிபுணர்கள் குழுவொன்றை அமைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதா? இவ்வாறான வைரஸ் நிலைமையின் போது வைரஸ் தொடர்பான மருத்துவ நிபுணர்கள் போன்றோரை உள்ளடக்கியதாக தீர்மானம் எடுப்பதற்கு விசேட நிபுணர்கள்குழு அமைக்கப்பட்டுள்ளதா? அத்துடன் ஆயுர்வேத மற்றும் யுனானி போன்ற மருத்துவ துறைகளை சேர்ந்தவர்கள் இந்த விசேட குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனரா? அவ்வாறு நியமிக்கப்பட்டிருந்தால் அவர்கள் என்பதனை அறிந்துகொள்ள விரும்புகின்றேன்.
அத்துடன் கொரோனா தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் தடுப்பூசி வேலைத்திட்டத்திற்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இது தொடர்பாக மருத்துவர்கள் இடையே இணக்கப்பாடுகள் உள்ளனவா?
இதேவேளை இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட எத்தனைப் பேர் இங்கு மரணித்துள்ளனர்?. எந்த தடுப்பூசி வழங்கியவர்கள் அதிகளவில் மரணித்துள்ளனர் என்று கேட்கின்றோம். மங்கள சமரவீர, மஹராஜா உள்ளிட்ட பிரபல நபர்கள் இங்கு உயிரிழத்துள்ளனர். இவர்கள் தடுப்பூசிகளை பெறத்றுக்கொண்டவர்களே. இதன்படி தடுப்பூசி மட்டுமா? இதற்கு பதில் என்று கேட்கின்றேன்.
அத்துடன் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்க முடியாது. அவ்வாறுதடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை கட்டுப்படுத்தமட்டுமே முடியும். அத்துடன் 30 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பாக ஆராய வேண்டும்.
இதேவேளை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது கூட்டு மருத்துவ முறை அவசியமானது என்று சீனா போன்ற நாடுகள் கூறியுள்ளன. பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத மருத்துவ துறைகளையும் இணைக்க வேண்டும். இதன்படி தேசிய மருத்துவ துறையும், மேற்கத்தைய மருத்துவ துறையும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
பா.கிருபாகரன், ந.ஜெயகாந்தன் – தினக்குரல் 8-9-21
Akurana Today All Tamil News in One Place