பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதை தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட நோயெதிர்ப்பு பிரிவு பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவிக்கின்றார்.
பெரும்பாலான மேற்குலக நாடுகளில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிக்கின்ற போதிலும், பாடசாலைகள் திறக்கப்பட்டன.
எனினும், இலங்கை உள்ளிட்ட 23 நாடுகள் மாத்திரமே, மே மாதம் முதல் பாடசாலைகளை மூடியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
யுனிசெப் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஹென்ரிடா போ மற்றும் யுனேஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒடி அசோலே ஆகியோரை மேற்கோள்காட்டி அவர் இதனை தெரிவித்துள்ளார்
இதேவேளை, அடுத்த ஜனவரி வரை குழந்தைகளை வீட்டில் வைத்திருக்க பெற்றோர்கள் ஒப்புக்கொள்வார்களா என்றும் நீலிகா கேள்வி எழுப்பினர். R -தமிழ் மிற்றோர்–
Akurana Today All Tamil News in One Place