கொவிட்−19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் நபர்களுக்காக வழங்கப்பட்டுள்ள கடன் சலுகையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற வணிக நிறுவனங்களுக்கு சுற்று நிரூபத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவிக்கின்றது.
கொவிட் பரவலினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி கூறியுள்ளது.
கடன் பெற்ற வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களின் கோரிக்கைக்கு அமைய, வங்கிகள் இந்த சலுகையை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்க தெரிவிக்கின்றது. -தமிழன்.lk-
Akurana Today All Tamil News in One Place