அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் அரசாங்கத்தால் இன்று முதல் நிர்ணயிக்கப்படவுள்ளன.
கூட்டுறவு சேவை, விற்பனை மேம்பாட்டு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, இதனைத் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் 125 ரூபாவை விடவும் குறைந்த விலையாக அது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு அவசியமான சீனி கையிருப்பில் உள்ளது, அத்துடன், அரிசியும் தேவையான அளவு இருக்கின்றது, எனவே, எவரும் தேவைற்ற வகையில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
-தமிழன்.lk-
Akurana Today All Tamil News in One Place