வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென கீழே வீழ்ந்து உயிரிழந்த 03 வயதேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியான சம்பவம் பலங்கொடை-மாரதென்ன பிரதேசத்தில் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.
விக்னேஸ்வரன் வருஷிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்திருப்தாக தெரிவிக்கப்படுகின்றது.
கீழே விழுந்த குழந்தையை பெற்றோர் உடனடியாக பலங்கொடை பொது மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
இதனையடுத்து, குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்னரே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்த குழந்தைக்கு நடததப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. -தமிழன்.lk-
Akurana Today All Tamil News in One Place