தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் மாத்திரமே, கொழும்பு மாவட்டத்தில் வீடுகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்க முடியுமென, கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த முறைகளை விட, இம்முறை இந்த விடயம் குறித்து தீவிர கண்காணிப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும், நுகர்வார் அதிகாரசபையின் அதிகாரிகளும் இது தொடர்பான சுற்றிவளைப்புகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேப்போல் நடமாடும் வர்த்தகர்களிடம் பொருள்களை கொள்வனவு செய்யும் போது, ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்படுமாயின் அது குறித்து, மாவட்ட செயலாளர் அலுவலகம், கிராம உத்தியோகத்தர் அல்லது நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவிக்க முடியும் என்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். -தமிழ் மிற்றோர்–
Akurana Today All Tamil News in One Place