இன்று மேலும் 21 நகரங்களின் கடைகளுக்கு பூட்டு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று (19) மேலும் 21 நகரங்களில் உள்ள கடைகளை மூடுவதற்கு, அந்தந்த நகர வர்த்தக சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இந்த நகரங்களில் மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் மருத்துவ மையங்கள் மட்டுமே திறந்திருக்கும் என்று வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் 58 நகரங்களில் உள்ள கடைகள் ஏற்கெனவே மூடப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் மொத்தமாக அதன் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது.அதன்படி,

வாரக்காபொல
வாரியபொல
துனகஹ
குளியாபிட்டிய
கம்புருபிட்டிய
உருபொக்க
பாதுக
எஹெலியகொட
மெதகம
ஹன்ஹமுனுவ
கிளிநொச்சி
திஸ்ஸமஹாரரம
வீரவில
பன்னேகமுவ
யோதகண்டிய
தெல்கொட
ஹிக்கடுவ
ஹபராதுவ,
படல்கும்புர,
காலி உடுகம, 
ஹசலக ஆகிய நகரங்களின் கடைகளே, இன்று (19) முதல் மூடப்பட்டன. -தமிழ் மிற்றோர்

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter