நாட்டில் சாரதிகளின் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சுமித் அலஹக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மோட்டார் வாகன திணைக்களத்தின் பிரதான காரியாலங்களும், பிரதேச அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.
இதன்காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான கால இடைவெளியில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் நிறைவடைந்த காலத்தில் இருந்து மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளவுள்ளவர்களுக்கான திகதியினை முற்பதிவு செய்யும் நடைமுறையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சுமித் அலஹக்கோன் தெரிவித்துள்ளார். -தமிழன்.lk-
Akurana Today All Tamil News in One Place