பதிவுத் திருமணங்களுக்கு அனுமதி

இன்றும் நாளையும் நடைமுறைக்கு வரும் புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பொது நிகழ்வுகள் மற்றும் திருமணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நாளை (17) நள்ளிரவு முதல் திருமணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எனினும் பதிவுகள் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

திருமண தம்பதியர், அவர்களது பெற்றோர், சாட்சிகள் மற்றும் பதிவாளர் ஆகியோரின் பங்கேற்புடன் திருமணப் பதிவுகளை வீடுகளில் நடத்தலாம், மற்றவர்கள் நிகழ்வில் பங்கேற்க முடியாது.

இதற்கிடையில் இன்று இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 04.00 மணிவரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அன்றாடம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகளின் ஊழியர்கள் மற்றும் வாகனங்கள் மட்டுமே இந்த காலகட்டத்தில் செயல்பட அனுமதிக்கப்படும்.-வீரகேசரி-

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter