ரிஷாத்தை விடுதலை செய்யக்கோரி ஒரு இலட்சம் கையெழுத்து வேட்டை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி கிண்ணியாவில் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகை பின் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

இக் கையெழுத்தினை அகில இலங்கை மக்கள் காங்ரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகரசபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தியினால் முன்னெடுக்கப்பட்டன.

நாடு முழுவதும் சுமார் ஒரு இலட்சம் கையெழுத்தினை மக்களிடமிருந்து பெற்று பாராளுமன்ற உப்பினர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு அனுப்பும் நோக்கில் வெள்ளிக்கிழமை கிண்ணியாவிலும் கையெழுத்து பெறப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்ரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகரசபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தி கூறும் போது,

ரிஷாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்டு 198 நாட்கள் கடந்து செல்கின்றன, ஜனநாயகக் கட்சியின் தலைவர், சிறுபான்மைக் கட்சியின் தலைவர். பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டபோதிலும் எதிலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட வில்லை.

நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துழைக்கின்ற ஜனநாயகக் கட்சியின் தலைவர் அவர். ஒரு முஸ்லிம் எந்தவொரு துரோகமும் செய்ய மாட்டார். அவர் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவர் குடும்பமும் கஷ்ட்டத்தின் விளிம்பில் இருக்கின்றது. அவரை விடுதலை செய்யக்கோரியே நாடளாவிய ரீதியிலே ஒரு இலட்சம் கையைழுத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆகவே ஜனாதிபதியும், பிரதமரும் அவருக்கு மன்னிப்பு வழங்கி கருணை அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை தயவுசெய்து ஜனாதிபதி எந்த நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் (தினக்குரல் 15-8-21)

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter