கொரோனா (கோவிட் -19) வைரஸை கட்டுப்படுத்த ஜப்பான் கண்டுபிடித்துள்ள ஹெவிகன் என்ற மருந்து நாளைய தினம் இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெவிகன் என்ற இந்த மருந்தை இறக்குமதி செய்ய வரையறுக்கப்பட்ட அரச மருந்து கூட்டுத்தாபனம் தீர்மானித்திருந்ததுடன் முதல் கட்டமாக 5 ஆயிரம் மாத்திரைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
நாளைய தினம் இந்த மருந்து இலங்கையை வந்தடையும் என அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் மருத்துவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place