ரவுப் ஹக்கீம் என்பவர் முஸ்லிம் சமூகத்திற்கு சேவையாற்றிய ஒருவர் அல்ல என அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னதாக மனோ கனேசன் மற்றும் ரிஷாத் ஆகியோர் தங்களுக்கு தேசிய பட்டியல் கோரியதாகவும் பின்னர் அந்த கோரிக்கையில் இருந்து பின்வாங்கியதாகவும் குறிப்பிட்டார்.
ரிசாத் பதியுத்தீன் தங்கள் கட்சிக்கு தேசியப்பட்டியல் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அதனை அஸாத் சாலிக்கு வழங்குமாறு கோரியதாக தகவல் கிடைத்துள்ளது.
இதில் கஷ்டக்காரர் ஹக்கீம் தான்.அவரது 7 ஐந்தாக குறைந்துள்ளதால் எப்படியாவது ஐந்தை அவர் 6 ஆக உயர்ந்த முயற்சி செய்கிறார்.
ஹக்கீம் நாசம் செய்வதிலேயே தலைவர்.அஷ்ரப் என்பவர் சமுகத்திற்கு சேவை ஆற்றியவர். ஆனால் ஹக்கீம் அவ்வாறான ஒருவரால்ல.எந்த அமைச்சை கொடுத்தாலும் அதன் ஊடாக மக்களுக்கு சேவை செய்யவில்லை. எதிர்காலத்தில் செய்யவும் மாட்டார்.
ரனில் விக்ரமசிங்கவும் ரவுப் ஹக்கீமும் ஒன்று.ஒரே பாடசாலையை சேர்ந்தவர்கள் ஒரே வேலையிட்டமே இருவரிடமும் உள்ளது.பதவியை தலைமைத்துவத்தை விட்டு செல்லமாட்டார்கள் என கூறினார்.
Akurana Today All Tamil News in One Place